பிரமானந்தம் - யோகிபாபு சந்திப்பு ஏன்? | ஆந்திரா மதுபான ஊழல் ; விசாரணை வளையத்தில் நடிகை தமன்னா : கோலிவுட் போல் டோலிவுட்டும் கலக்கம் | 3 மணி நேரம் ஓடப் போகும் 'வார் 2' | வாழ்க்கை என்பது ஒரு வட்டம் ; ராஷி கண்ணாவின் புதிய மகிழ்ச்சி | ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு ; நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட விடாமல் தடுக்கும் முயற்சியா? | நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் |
கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவர் சிங்கீதம் சீனிவாச ராவ். 1972ம் ஆண்டு வெளிவந்த 'நீதி - நிஜயதி' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கில் படங்களை இயக்கி வந்த அவரை தனது 100வது படமான 'ராஜ பார்வை' படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்தார் கமல்ஹாசன்.
அதன்பின் கமல்ஹாசன் நடித்த “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா, மும்பை எக்ஸ்பிரஸ்,' ஆகிய படங்களை இயக்கினார். அப்படங்கள் தவிர பிரபு நடித்த 'சின்ன வாத்தியார்,' ஜோதிகா நடித்த 'லிட்டில் ஜான்' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய சிங்கீதம் சீனிவாச ராவ், 2013ல் வெளிவந்த 'வெல்கம் ஒபாமா' என்ற படத்தைக் கடைசியாக இயக்கினார். கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வில் இருக்கும் சிங்கீதம் சீனிவாச ராவ் இன்று தன்னுடைய 93வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அவருக்கு நடிகர் கமல்ஹாசன், “மிக மூத்த இயக்குநராக இருக்கலாம், ஆனாலும் என் மனதில் துறுதுறுத்த இளைஞராகவே பதிந்திருப்பவர் திரு. சிங்கிதம் சீனிவாசராவ்காரு. அபூர்வ சகோதரர்கள், பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன் கால சந்தோஷத் தருணங்கள் எனக்குள் இப்போதும் குமிழியிடுகின்றன. மாயாபஜார் காலம் தொடங்கி, என் மும்பை எக்ஸ்பிரஸ்ஸில் தொடர்ந்து இன்னமும் உற்சாகத்தோடு வளையவரும் சீனிவாசராவ்-க்கு என் மனமகிழ்ந்த பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.