தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சினிமாவில் பொறுமை அவசியம் ; நல்ல படங்களுக்காக காத்திருக்கிறேன்... : புதுமுகம் ஜீவிதா! |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ். தற்போது வாழை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போகிறார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தின் டெக்னீசியன் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.
துருவ் விக்ரமின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்துள்ள துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்திற்காக பல மாதங்களாக கபடி விளையாட்டு பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.