செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
நடிகை
ராஷ்மிகா மந்தனா தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானதை தொடர்ந்து தமிழ்
படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் அர்ஜுன் ரெட்டி பட
இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர்க்கு
ஜோடியாக நடித்து வரும் திரைப்படம் 'அனிமல்'. டி சீரியஸ் நிறுவனம்
தயாரிக்கும் இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார். டிசம்பர்
1ம் தேதி அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில்
இப்படம் வெளியாகிறது.
இப்படத்தின் டீசர் வருகின்ற
செப்டம்பர் 28ம் தேதி அன்று வெளியாவதால் ஏற்கனவே அனில் கபூரின் பர்ஸ்ட்
லுக்கை படக்குழு வெளியிட்டது. இப்போது ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக்கை
வெளியிட்டுள்ளனர். இதில் ராஷ்மிகா கீதாஞ்சலி எனும் கதாபாத்திரத்தில்
நடிப்பது குறிப்பிடத்தக்கது.