வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்துள்ள திரைப்படம் 'சித்தா'. நிமிஷா சஜயன் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான பாடல்களை திபு நினன் தாமஸ், பின்னணி இசை விஷால் சந்திரசேகர் என இருவரும் இசையமைத்துள்ளனர். செப்டம்பர் 28ம் தேதி அன்று இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளிவந்த டீசர், பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து, இந்த படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள் படம் நன்றாக உள்ளதாக தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணிக்கு நடிகர் சூர்யா அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவதாக படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.