‛எக்ஸ்க்ளூசிவ்' போட்டும் இறங்கிப் போன 'வார் 2' | அமெரிக்காவில் 6 மில்லியன் வசூலித்த 'கூலி' | அரசு பேருந்து ஓட்டி தொகுதி மக்களை குஷிப்படுத்திய பாலகிருஷ்ணா | பெண்கள் பொறுப்பு குறித்த சர்ச்சை பேச்சால் கண்டனத்துக்கு ஆளான விக்ரம் பட வில்லன் | சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? |
கடந்த 2017ம் ஆண்டில் ‛8 தோட்டங்கள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இளம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். அதன் பிறகு இவர் இயக்கும் அடுத்த படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இவ்வாறு கடந்த ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் திரைக்கு வந்த 'குருதி ஆட்டம்' ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது.
இந்த நிலையில் நீண்ட மாதங்கள் கழித்து ஸ்ரீ கணேஷின் அடுத்த கட்டம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஸ்ரீ கணேஷ் புதிதாக வெப் தொடர் ஒன்றை அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்கு இயக்குகிறார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இதன் முன் தயாரிப்பு பணிகள் கடந்த சில மாதங்கள் நடைபெற்றது. இப்போது இதன் நடிகர், நடிகை தேர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.