மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
முன்னணி மலையாள நடிகை நித்யா மேனன். தமிழில் மெர்சல், இருமுகன், காஞ்சனா, 24, சைக்கோ உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். கடைசியாக தனுசுடன் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்தார். இதுதவிர கன்னடம் மற்றும், தெலுங்கு படங்களில் நடித்துள்ள நித்யா மேனன் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்த 'மிஷன் மங்கள்' படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அபிஷேக் பச்சனுடன் 'ப்ரீத் இன் டு த ஷெடோவ்ஸ்' என்ற வெப்சீரிஸில் நடித்தார்.
இந்நிலையில் விஷால் ரஞ்சன் மிஸ்ரா இயக்கும் 'மர்டர் மிஸ்டரி' என்ற ஹிந்தி படத்தில் அவர் நாயகியாக நடிக்கிறார். இதில் விவேக் ஓபராய், ஆஷிஷ் வித்யார்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். ஒரு கொலையை சுற்றி நடக்கும் கதையில் ஆஷிஷ் வித்யார்த்தி மூத்த விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தில் நடந்து வருகிறது. இதற்காக நித்யா மேனன் அங்கு சென்றுள்ளார். அங்கு 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.