துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 12வது படத்தை ஜெர்ஸி படத்தின் இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார் . சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீ லீலா நடிப்பதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் இப்படத்திலிருந்து ஒரு சில காரணங்களால் ஸ்ரீ லீலா வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கீதா கோவிந்தம், டியர் காம்ரெட் படங்களை தொடர்ந்து மூன்றாம் முறையாக விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.