நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
விஜய் நடித்திருக்கும் லியோ படம் அடுத்த மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், தற்போது புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் நா ரெடி என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், தற்போது லியோ படத்தின் இரண்டாவது சிங்கிளாக படாஸ் என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள். அனிருத் இசையமைத்து பாடி இருக்கும் இந்த பாடலை, நா ரெடி என்ற பாடலை எழுதிய அதே விஷ்ணு எடவன் என்பவரே எழுதி இருக்கிறார். சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து, இவன் வேட்டைக்கு சிதறனும் பயந்து. பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி, குடல் உருவுற சம்பவம் உறுதி. இதுவரையில் நல்லவனா இருந்தான் இந்த கதையில் ராட்சசன் முகம்தான். வத்திக்குச்சியில் எரிமலை, மகனே நெருங்காதே நீ -என்று இப்பாடலின் வரிகள் இடம் பெற்றுள்ளன. பாடல் வெளியான 18 மணிநேரத்தில் 94 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.