படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ஆயுட்கால உறுப்பினருமான, வி.ஏ.துரை(59) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
பிதாமகன், கஜேந்திரா, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, என்னம்மா கண்ணு உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. மனைவி, மகளை பிரிந்து வாழும் அவர் சென்னையில் உள்ள அவரது வீட்டில், தனியாக வசித்து வந்தார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவ செலவுக்கு பணமின்றி அவதிப்பட்டார். அவருக்கு நடிகர் பலரும் உதவி செய்தனர். இந்நிலையில், தொடர் சிகிச்சையில் இருந்த அவர், இன்று(அக்.,02) இரவு காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.