அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 15ம் தேதி வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. விஷால், எஸ்ஜே சூர்யா இருவரும் இரு வேடங்களில் நடிக்க, டைம் டிராவல் கதையாக வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிப் படமானது.
இப்படத்தின் டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே படம் வெற்றி பெறும் என்று படம் வெளியாவதற்கு முன்பே சொன்னார்கள். அது போலவே படமும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. விஷால் நடித்து இதுவரை வெளிவந்த எந்த ஒரு படமும் 100 கோடி வசூலைப் பெற்றதில்லை. அவர் நடித்து 2018ல் வெளிவந்த 'இரும்புத் திரை' படம் 60 கோடி வரை வசூலித்தது. அதுதான் அவரது படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம்.
இப்போது அந்த வசூலை 'மார்க் ஆண்டனி' முறியடித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம் 100 கோடி வசூலைத் தொட்டுவிடும் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார். விஷாலின் முதல் 100 கோடி படமாக இந்தப் படம் அமையப் போகிறது.