நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
தமிழில் சில பல முக்கிய படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். அவரை இந்தக் கால ரசிகர்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான். இன்றைய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரை அறிமுகப்படுத்தியவர் குஞ்சுமோன் தான்.
தமிழில் 'வசந்தகாலப் பறவை, சூரியன், ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம், ரட்சகன்' ஆகிய படங்களைத் தயாரித்தவர். தற்போது 'ஜென்டில்மேன் 2' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
அப்போது பேசிய அவர், “அப்போதே நான் பிரம்மாண்டம் செய்திருக்கேன். கோடானு கோடி செலவு செய்திருக்கேன். அப்போதே எல்லாரும் கேட்டார்கள். ஆர்ட்டிஸ்ட் வேல்யு இல்லை, டைரக்டர் வேல்யு இல்லை என்று. படத்துக்குத் தகுந்த மாதிரி செட், பைட், சாங் எல்லாம் அமைஞ்சது. அதுக்கு நான் மட்டும் காரணம் இல்லை. டைரக்டரோட திறமை, அவருக்கு எல்லா வசதியும் செஞ்சி கொடுத்தேன். 30 வருஷத்துக்கு முன்னாடியே இந்த பான் இந்தியா பண்ணிட்டேன். அப்பவே அப்படி பண்ணி ப்ரூவ் பண்ணிட்டேன். “ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம்” உலகம் முழுக்க ஓடுச்சு. இப்ப இந்த 'ஜென்டில்மேன் 2' படத்தை பான் வேர்ல்டு தான் பண்ணப் போறேன்,” என்றார்.