சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கும் ஹிந்திப் படம் 'அனிமல்'. இப்படத்தை பான் இந்தியா படமாக ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். இப்படத்தின் முதல் சிங்கிளான 'நீ வாடி' என்ற பாடலை இன்று யூடியூபில் வெளியிட்டார்கள்.
இப்பாடல் வெளியீட்டிற்காக நேற்று வெளியிட்ட போஸ்டரில் ரன்பீர், ராஷ்மிகா இருவரும் உதடோடு உதடு வைத்து முத்தமிட்ட புகைப்படம் இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தது. இன்று வெளியான அப்பாடல் 2 நிமிடங்கள் 45 விநாடிகள் மட்டுமே இருந்தது. அந்த மூன்று நிமிடப் பாடலுக்குள் ரன்பீர், ராஷ்மிகா இருவரும் மூன்று முறை உதட்டோடு உதடு வைத்து முத்தமிடும் காட்சி இடம் பெற்றிருக்கிறது.
ராஷ்மிகா இதுவரையில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்திருந்தாலும், ஹிந்திப் படம் என்றதும் இப்படி முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார் என பேசப்படுகிறது. அங்கெல்லாம் தாராளமாக நடித்தால்தான் மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். அதனால், இப்படி நடித்திருப்பாரோ என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.