துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்து அக்டோபர் 19ம் தேதி வெளிவர உள்ள 'லியோ' படத்திற்கான சிறப்புக் காட்சிகள் அனுமதி குறித்து இன்று அரசு ஆணை ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த ஆணையில் விஜய் பெயர் 'தளபதி விஜய்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஆணையிலேயே விஜய் பெயரை தளபதி எனக் குறிப்பிட்டுள்ளது குறித்து விஜய் ரசிகர்கள் அதையும் டிரெண்டாக்கி வருகிறார்கள். அரசு வெளியிட்டுள்ள ஒரு ஆணையில் இப்படி பட்டப் பெயருடன் விஜய் பெயரை குறிப்பிட்டுள்ளது நிச்சயம் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
தமிழக முதல்வர் முக ஸ்டாலினை அவரது கட்சிக்காரர்கள் தளபதி என்றே நீண்ட காலமாக அழைத்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக 'இளைய தளபதி' என போட்டு வந்த விஜய் 'தளபதி' என போட ஆரம்பித்தார். அதற்கு திமுகவினர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவிக்கவில்லை என்றாலும் எதிர்ப்புகளைத் தெரிவித்து நிறுத்திவிட்டனர்.
இப்போது அரசு ஆணை வரை 'தளபதி விஜய்' என்பது சென்றுவிட்டதால் அந்த அரசு ஆணையை தயாரித்தவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.