திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
விஜய் நடித்துள்ள 'லியோ' படத்திற்கு அக்டோபர் 19ம் தேதி முதல் அக்டோபர் 24ம் தேதி வரை தியேட்டர்களில் தினமும் 5 காட்சிகளைத் திரையிட அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், சிலர் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலைப் பரப்பினர். நேற்று பேசிய தமிழக செய்தி விளம்பரத் துறை அமைச்சர் காலை 9 மணிக்கு காட்சிகளை ஆரம்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
அக்டோபர் 20ம் தேதி காலை 9 மணி காட்சியிலிருந்து மட்டுமே பல தியேட்டர்கள் முன்பதிவுகளை ஆரம்பித்தன. படம் வெளியாகும் நாளுக்கான முன்பதிவுகளை ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில் புதிய அரசு ஆணை ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், “அனைத்து தியேட்டர்களும் ஒரு சிறப்புக் காட்சியை நடத்தலாம். காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் காட்சிகள் நள்ளிரவில் 1.30 மணிக்குள்ளாக முடிக்க வேண்டும்,” எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால் காலை 8 மணி காட்சிகளை நடத்த முடியாது.
கடந்த முறை வெளியிட்ட அரசு ஆணையில் விஜய்யை 'தளபதி விஜய்' எனக் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதிய ஆணையில் வெறும் 'லியோ' படம் என மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.