திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'லியோ' படம் ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாக உள்ளது என இரண்டு தினங்களுக்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அமெரிக்காவில் இப்படத்தின் ஐமேக்ஸ் பிரிமியர் காட்சிகள் ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 18ம் தேதியன்று நடத்துவதாக இருந்தது. அதற்கான முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் அக்காட்சிகள் ரத்தாகியுள்ளன, முன்பதிவுக்கான பணத்தையும் திரும்ப வழங்கி வருகிறார்கள்.
ஐமேக்ஸ் வடிவ பிரதியை குறித்த நேரத்தில் தராததே அதற்குக் காரணம் என்கிறார்கள். இதனால், ஐமேக்ஸ் தியேட்டர்களில் படத்தைப் பார்க்க ஆவலுடன் முன்பதிவு செய்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அதனால், அவர்கள் உடனடியாக மற்ற தியேட்டர்களில் படத்தைப் பார்க்க முன்பதிவு செய்து வருகின்றனர். குறித்த நேரத்தில் பிரதியை வழங்கத் தவறிய தயாரிப்பு நிறுவனத்தை அமெரிக்க விஜய் ரசிகர்கள் குறை கூறி திட்டி வருகின்றனர்.