தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பின் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் சமீபத்தில் துவங்கியது. அதன்பின் திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரஜினிகாந்த் பங்கேற்று நடிக்கிறார். இதனால் அந்த பகுதிகளில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் அதிகளவில் கூடுகின்றனர்.
கன்னியாகுமரியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தூத்துக்குடி வந்த ரஜினிகாந்த், விமான நிலையத்தில் அளித்த பேட்டி : ‛‛புவனா ஒரு கேள்விக்குறி படப்பிடிப்பிற்கு பிறகு இப்போது தான் இங்கு வருகிறேன்; இங்குள்ள மக்கள் மிகவும் அன்பான மனிதர்கள். எல்லோருடனும் போட்டோ எடுக்க முடியவில்லை என்பதே என் வருத்தம். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்,'' என்றார்.
சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து ரஜினி, விஜய் இடையே பல சர்ச்சைகள் எழுந்தன. ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் கூட ரஜினி பேசிய காக்கா, கழுகு கதைகள் விஜய்யை மறைமுகமாக ரஜினி பேசியதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இதை வைத்து ரஜினி, விஜய் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் சண்டையிட்டு வந்தனர். இந்நிலையில் லியோ படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என ரஜினி வாழ்த்தி இருப்பது விஜய் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.