பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படம் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது.
தெலுங்கில் வழக்கத்தை விட அதிகமான தியேட்டர்களில் இப்படம் வெளியானது. முதல் நாளில் 16 கோடி வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சற்று முன் இரண்டாவது நாள் வசூலையும் சேர்த்து இரண்டு நாளில் 24 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளார்கள். முதல் நாள் வசூலை விடவும் இரண்டாவது நாள் வசூல் பாதியாகக் குறைந்துள்ளது.
இருப்பினும் நேரடித் தெலுங்குப் படங்களான 'பகவந்த் கேசரி, டைகர் நாகேஸ்வரராஜ்' ஆகிய படங்களுடன் போட்டியிட்டு இன்று மூன்றாவது நாளிலும் குறிப்பிடும்படியான முன்பதிவு நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.
தெலுங்கு உரிமையாக இப்படம் 20 கோடிக்கு பேசப்பட்டு 16 கோடிக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. 24 கோடி மொத்த வசூலில் நிகரத் தொகையாக 12 கோடிக்கும் அதிகமாக வந்திருக்கும். இன்று அல்லது நாளைக்குள் இப்படம் லாபக் கணக்கைத் துவங்கிவிடும் என்கிறார்கள்.