5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
கடந்த 2012ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக அறிவித்த திரைப்படம் 'யோஹன் அத்தியாயம் ஒன்று'. அந்த காலகட்டத்தில் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் அறிவிப்போடு கைவிடப்பட்டது. இதற்கான காரணம் இதுவரை யாரும் சரியாக தெரிவிக்கவில்லை .
இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து தெரிவித்துள்ளார். அதன்படி, " யோஹன் ஆக்ஷன் ஸ்பை த்ரில்லர் திரைப்படம். இது முழு கதையாக உருவான பிறகு இதில் நிறைய ஆங்கில வசனங்கள் இடம்பெற்றது. தமிழ் வசனங்கள் பின் குரலில் ஒலிக்கும். இது அந்த சமயத்தில் புதிய முயற்சியாக இருந்தது. இதில் விஜய்-க்கு பெரிதளவில் உடன்பாடு இல்லை"என இவ்வாறு பகிர்ந்துள்ளார்.