மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா திருமணத்திற்கு பிறகு அதிக அளவில் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் திரிஷ்யம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மலையாள திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வந்தார். இடையில் அவரது கணவரின் மறைவு காரணமாக சில காலம் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த மீனா தற்போது மீண்டும் முன்னைப்போல படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் மலையாளத்தில் அனந்தபுரம் டைரீஸ் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மீனா.
இந்த படத்தில் மிகுந்த பிரச்னைகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையே வழக்கறிஞராக துடிக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மீனா. இப்படி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மீனா நடிப்பது இதுதான் முதல் முறை. இந்த படத்தை ஜெய ஜோஸ் ராஜ் என்பவர் இயக்குகிறார். வழக்கறிஞர் கதை என்றாலும் இதில் ஒரு குறிப்பிட்ட பகுதி கதை கல்லூரியில் நடைபெறும் விதமாக படமாக்கப்பட்டு உள்ளது.
இதில் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். மேலும் நடிகர் மனோஜ் கே.ஜெயன் இதில் இன்னொரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் துவங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.