படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகை தமன்னா முதன்முறையாக மலையாள திரையுலகில் திலீப் கதாநாயகனாக நடிக்கும் பாந்த்ரா என்கிற படத்தின் மூலம் அடி எடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே திலீப்பிற்கு ராம்லீலா என்கிற மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் அருண்கோபி இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் திலீப் பேசும்போது, “தமன்னாவுடன் இந்த படத்தில் எனக்கு ஒரு பாடல் காட்சி இருந்தது. அதுகுறித்து எனது மகள் மீனாட்சியிடம் கூறியபோது தமன்னாவுடன் நடனம் ஆடப்போகிறீர்களா? தயவு செய்து அவருடன் அருகில் இணைந்து நின்று ஆட வேண்டாம். அவரிடமிருந்து கொஞ்சம் தூரமாக தள்ளி நின்று அவரை பார்த்துக்கொண்டே வாயசைத்து பாடுவது போல நடித்து விடுங்கள். நடனம் ஆடும் ரிஸ்க் எல்லாம் எடுத்து உங்களை டேமேஜ் பண்ணிக் கொள்ள வேண்டாம் என்று கூறி தமன்னா பற்றி பயம் காட்டினார்.
அதற்கு காரணம் சமீபத்தில் வெளியான தமான்னாவின் காவலா பாடலும் ஒரு காரணம். ஆனால் பாந்த்ரா படப்பிடிப்பில் என் மகள் இப்படி கூறினால் என தமன்னாவிடம் இதுபற்றி கூறியபோது அதை கேட்டுவிட்டு சிரித்த தமன்னா, எனக்கும் நடனம் அவ்வளவாக ஆடத் தெரியாது.. ஏதோ சொல்லிக் கொடுத்ததை செய்து வருகிறேன் என்று கூறியபோது தான் எனக்கும் அப்பாடா என நிம்மதியாக இருந்தது” என்று வேடிக்கையாக கூறினார் திலீப்.