பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர் | படத்தை பார்க்காமலேயே மறைந்த ஷிஹான் ஹுசைனி | '3BHK' படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த் | உதவி இயக்குனர்களுக்கு நன்றி சொன்ன நிமிஷா சஜயன் | தணிக்கை சான்றிதழ்களில் திருத்தம்: வாரியம் முடிவு | சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனத்தை நீக்கினால் 'மனுஷி' க்கு சான்றிதழ்: நீதிமன்றத்தில் தணிக்கை குழு தகவல் | பிளாஷ்பேக்: சிவாஜி, பிரபு இரு வேடத்தில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 65 ஆண்டுகளுக்கு பிறகு கதை புகாரில் சிக்கிய 'மருதநாட்டு இளவரசி' | சினிமாவுக்கு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் | பெய்டு வியூஸ் - 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு அதிரடி அறிவிப்பு |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014ல் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛ஜிகர்தண்டா'. இதன் இரண்டாம் பாகம் தற்போது ‛ஜிகர்தண்டா : டபுள் எக்ஸ்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவ., 10ல் படம் ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். முதல்பாகத்தை விட மிரட்டலான மேக்கிங் காட்சிகள் இருப்பது டிரைலரில் தெரிகிறது. அதற்கு பக்கபலமாய் சந்தோஷ் நாராயணனின் இசையும் உள்ளது. இதுவும் சினிமா கதைக்களத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகி உள்ளது. படத்தின் கதைக்களம் 1975ல் நடப்பது போன்று எடுத்துள்ளனர். கருப்பு ஹீரோவாக கேங்ஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இயக்குனராக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். தாதாயிசம், சினிமா, அரசியல் ஆகியவற்றை கலந்து இதன் திரைக்கதை இருக்கும் என தெரிகிறது. தற்போது இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.