தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் பல வகையான கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் இதுகுறித்து பேசிய போது ‛முந்தைய சீசன்களில் சிலர் வென்றார்கள் என்பதற்காக அதே போன்ற விளையாட்டை இப்போது விளையாடினால் இப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள் என நினைக்கக் கூடாது. அன்று ஏன் ஓட்டு போட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியாது என நினைக்கிறேன்' என்று கூறியிருந்தார்.
இதில் கமல்ஹாசன் அசீமை தான் அப்படி பேசியிருக்கிறார் என புதுவிவாதம் இணையதளங்களில் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து தற்போது பேட்டியளித்துள்ள அசீம், 'பிக்பாஸில் நான் எந்த தவறான வார்த்தையும் பேசவில்லை. வாடி போடி என்று சொன்னேன். அதற்கும் மன்னிப்பு கேட்டுவிட்டேன். இந்த சீசனில் சிலர் கெட்ட வார்த்தை பேசி வருகிறார்கள். எனக்கு பட்டத்தை விஜய் டிவியோ கமல் சாரோ கொடுக்கவில்லை. மக்கள் தான் எனக்கு ஓட்டுபோட்டு பட்டத்தை ஜெயிக்க வைத்தார்கள். அப்படி என் வெற்றியை கமல் சாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவர் மக்கள் போட்ட ஓட்டுகளை உதாசீனப்படுத்துவதாக அர்த்தம்' என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.