கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! |
பிரியாமணி தற்போது ஹிந்தி படங்கள், வெப் தொடர்கள் என பிசியாக நடித்து வருகிறார். சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் தமிழில் நடிக்கும் படம் கொட்டேஷன் கேங். இதில் அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், சாரா அர்ஜுன், அஷ்ரப் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா உள்பட பலர் நடிக்கிறார்கள். பிலிமிநிதி எண்டர்டெயின்மென்ட் சார்பில் விவேக் குமார் கண்ணன் தயாரித்து இயக்குகிறார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார், டிரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விவேக் குமார் கண்ணன் கூறியதாவது: இது கிரைம் த்ரில்லர் ஜார்னரில் உருவாகி உள்ள கேங்ஸ்டர் படம். குடும்ப சூழ்நிலை காரணமாக கேங்ஸ்டராக மாறுகிறார் நாயகி பிரியாமணி. ஆணாதிக்கம் நிறைந்த கேங்ஸ்டர்களோடு அவர் எப்படி மோதுகிறார் என்பது முக்கிய கதையாக இருந்தாலும், 3 வெவ்வேறு கதைகள் அவரோடு இணையும். பல சண்டை காட்சிகளிலும் பிரியாமணி நடித்துள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஜாக்கி ஷெராப் வில்லனாக நடித்துள்ளார். அவரது மனைவியாக சன்னி லியோன் நடித்துள்ளார். என்றார்.