5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் நடிக்க தொடங்கிய ஜோதிகா, தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‛காதல் தி கோர்' என்ற படத்தில் நடித்துள்ளார். ஜோ பேபி என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, மம்முட்டி, ஜோதிகாவின் நடிப்பு மற்றும் மலையாள சினிமாவையும் பாராட்டி இருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛கடினமான கதைக்களத்தையும் மிக எளிதாக மலையாள சினிமா துறையினர் கொடுப்பதை பார்த்து வியப்பாக உள்ளது. காதல் தி கோர் படத்தை நவம்பர் 23ம் தேதியில் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். மம்முட்டி, ஜோதிகா, ஜோ பேபி குழுவிற்கு வாழ்த்துக்கள்' என்று சூர்யா பதிவிட்டு இருக்கிறார்.