துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நாயகனாக நடித்துள்ள படம் ‛சிங்கப்பூர் சலூன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது தான் அளித்த ஒரு பேட்டியில் அவர் நடித்துள்ள கேரக்டர் குறித்த ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் கோகுல்.
அவர் கூறுகையில், இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு சினிமா இயக்குனராகவே வருகிறார். ஆர்.ஜே.பாலாஜியின் சலூனுக்கு வந்து முடி கத்தரித்து கொள்கிறார். இந்த ஒரே ஒரு சீனில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார். அந்த காட்சிக்கு ஒரு பிரபலம்தான் நடிக்க வேண்டும் என்று யோசித்தபோது லோகேஷ் கனகராஜ் தான் என்னுடைய ஞாபகத்துக்கு வந்தார். இதை சொன்னதும் மகிழ்ச்சியுடன் ஏற்று அந்த சிறப்பு தோற்றத்தில் அவர் நடித்துக் கொடுத்தார் என்கிறார் கோகுல்.