துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நடிகர் கார்த்தி நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஜப்பான்' படம் தோல்வியை தழுவியது. தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 50% சதவீதத்திற்கும் மேல் முடிவடைந்துள்ளது. ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில், "கார்த்தி 26வது படத்திற்கு வா வாத்தியாரே என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது ஹீரோ படமாகவும், இயக்குனர் படமாகவும் இருக்கும். சூது கவ்வும் போன்ற திரைப்படம். இது அல்லாமல் நலன் குமாரசாமி மூன்று கதைகளை வைத்துள்ளார். இதில் ஒன்று விஜய் சேதுபதிக்கான கதை. அது வேற லெவலில் இருக்கும்," என தெரிவித்துள்ளார்.