சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கவுதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், விக்ரம், ரித்து வர்மா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'துருவ நட்சத்திரம்'. பல சிக்கல்கள், பிரச்சனைகள், தடைகளைத் தாண்டி இப்படம் கடந்த வாரம் நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் படம் வெளியாகவில்லை.
இதனிடையே படத்தை டிசம்பர் 1ம் தேதி வெளியிடுவதற்கான வேலைகளை கவுதம் மேனன் ஆரம்பித்ததாகச் சொன்னார்கள். படத்திற்காக இருக்கும் பஞ்சாயத்துகளை பேசித் தீர்த்து வைக்க அவருடைய பழைய நண்பரும் தயாரிப்பாளருமான மதன் உதவியை அவர் நாடினார் என்றும் தகவல் வெளியானது.
தற்போது கேரளா தியேட்டர்காரர்களுக்கு, அதன் கேரள வினியோகஸ்தர் படம் டிசம்பர் 1ல் வெளியாகாது என்று தகவல் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. டிசம்பர் 8ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இன்னும் பத்து நாட்கள் உள்ளதால் அதற்குள் அனைத்து பஞ்சாயத்துகளையும் முடித்துவிடலாம் என நினைத்துள்ளார்களாம்.