துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
'உறியடி' படத்தின் மூலம் புகழ்பெற்றவர் விஜய்குமார். அதன்பிறகு சூர்யா தயாரிப்பில் உறியடி இரண்டாம் பாகத்தை இயக்கினார். தற்போது அவர் நடிக்கும் படம் ‛பைட் கிளப்'. ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாங்கி வெளியிடுகிறார். அவரது 'ஜி ஸ்குவாட்' நிறுவனத்தின் முதல் வெளியீடு இது.
அப்பாஸ் ஏ. ரஹ்மத் இயக்கியுள்ளார். விஜய்குமார் ஜோடியாக மோனிஷா மோகன் மேனன் நடித்திருக்கிறார். இவர்களுடன் கார்த்திகேயன், சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்கி மற்றும் அம்ரீன் - அபுபக்கர் ஆகியோர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். ஹாலிவுட்டில் வெளிவரும் ஸ்ட்ரீட் பைட் பாணியிலான படம் என்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.