மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதில் தாடி மீசை இல்லாமல் பள்ளி மாணவன் தோற்றத்தில், கண்ணாடி முன்பு அவர் நின்று கொண்டிருக்கிறார். அதோடு, ‛கண்ணாடியில் பார் உன்னுடைய போட்டியாளர் தெரிவார்' என்ற ஒரு கேப்சனையும் கொடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் வெளியிட்டுள்ள இந்த புதிய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.