அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

கர்நாடகாவில் வழக்கு ஒன்றில் ஆஜரான நடிகர் ரஜினியின் மனைவி லதா ரஜினி நிபந்தனை ஜாமீன் பெற்ற நிலையில் அவரது வீட்டில் அளித்த பேட்டி:
ரொம்ப நாளாகவே இந்த வழக்கு போய் கொண்டிருக்கிறது. என்னை துன்புறுத்தவும், மிரட்டுவதற்கும் மட்டுமே புகார்தாரர்களால் பொய்யான கேவலமான வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பத்திரிகை மற்றும் ஊடகத்தில் வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை.
மீடியா ஒன் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கோச்சடையான் படத்திற்காக பைனான்ஸ் கொடுத்தனர். அதற்கு நான் உத்தரவாத கையெழுத்து போட்டேன். அதற்குன்டான பணமும் செட்டில் ஆகிவிட்டது. அதன் பின் அந்த ஒப்பந்தத்தை மாற்றி என்னை இதில் சிக்க வைத்துள்ளனர். இதற்கு காரணம் என் பாப்புலாரிட்டியே. சுப்ரீம்கோர்ட்டில் என்னை நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளதுடன் டிஸ்சார்ஜ் விண்ணப்பத்தை தாக்கல் செய்யும் அனுமதித்தது. நீதிமன்றத்தில் ஜாமீனுக்கான விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தவறான தகவல் மற்றும் சில போலி ஆதாரங்களால் என்னை இதில் சிக்க வைத்தனர். அதனாலேயே நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பளித்து நேற்று கர்நாடக நீதிமன்றத்தில் ஆஜர் ஆனேன். இத்தனை ஆண்டுகளாக எங்களை துரத்தி வழக்கு போட்டனர். சாதாரண பெண்ணாக இருந்தால் இந்த வழக்கு வந்திருக்காது. பிரபலமாக இருப்பதால் இந்த நிலை.நியாயத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் போராடலாம். அநியாயத்துக்கு துணை போக மாட்டேன். என் மீது வழக்கு போட்ட பின், மூன்றாவது நபர் மூலம் செட்டில்மென்ட் பேசினர். நியாயம் எது என தெரிந்தால் ரஜினி சார் எது வேண்டுமானாலும் செய்வார். அவரிடம் சொல்லிவிட்டே இன்று உங்களை சந்திக்கிறேன். என் மீது வழக்கு போட்டவர்கள் மீது, நான் அவதுாறு வழக்கு தொடுக்க உள்ளேன்.
ரஜினி சாரை அரசியலுக்கு வரவழைக்கவே இந்த வழக்கு என்பதை என்னால் ஏற்க முடியாது. அப்படியெல்லாம் இல்லை. அவர் அரசியலுக்கு வராமல் போனதற்கு என்னை பொறுத்தவரை வருத்தம் தான். நான் அவரை தலைவராகவே பார்த்தேன். வராமல் போனதும் நியாயமான முடிவாக இருந்தது. அவர் அரசியலுக்கு வராமல் இருந்தாலும் மக்களுக்கு இப்போதும் நல்லது செய்து கொண்டு தான் உள்ளார். நீதிமன்றத்தை மதித்தே நான் நேரில் சென்று ஆஜர் ஆனேன். எங்கள் பள்ளி விவகாரத்திலும் உண்மை பலருக்கும் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.