தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மாவீரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. கடந்த 2016ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இப்போதுதான் திரைக்கு வருகிறது. அதோடு இந்த அயலான் படத்திற்காக 4500-க்கு மேற்பட்ட விஷுவல் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை விழா நடைபெற்றதை அடுத்து தற்போது பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஒரு பேட்டியில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 171-வது படத்தில் நீங்கள் நடிப்பதாக கூறப்படுகிறதே என்று கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் எனது ரோல் மாடல். சிறு வயதிலிருந்தே அவரது நடிப்பை பார்த்து தான் நான் நடிப்பு கற்றுக் கொண்டேன். அதனால் அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அவருடன் ஒரு சீனில் நடிக்க வேண்டும் என்று சொன்னாலும் மறுக்காமல் நடிப்பேன். என்றாலும், இதுவரை ரஜினி 171-வது படத்தில் நடிப்பதற்கு எந்த அழைப்பும் எனக்கு வரவில்லை என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.