தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
விஜய்யின் 68வது படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்த படத்திற்கு Greatest Of All Time என்பதன் சுருக்கமாக ‛தி கோட்' என பெயரிட்டுள்ளனர். பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் நேற்று வெளியான போஸ்டரில் விஜய் இரண்டு வித தோற்றங்களில் இருந்தார். இன்று(ஜன., 1) புத்தாண்டில் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டனர். அதில் ஒரு அதிவிரைவு பைக்கில் பறந்தபடி இரண்டு விஜய் துப்பாக்கியால் சுடுவது மாதிரியான போஸ்டர் இடம் பெற்றுள்ளது.