முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களின் அபிமான இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அவரது இசையில் வெளியாகும் பாடல்கள் பலவும் சூப்பர் ஹிட்டாவதும், யு டியூபில் 100 மில்லியன் பாடல்களை அதிகமாகக் கடப்பதும் நடக்கிறது. இருந்தாலும் அவர் மீது அவ்வப்போது காப்பி சர்ச்சை விமர்சனங்களும் எழுகிறது.
தெலுங்கில் அவர் இசையமைத்து வரும் 'தேவரா' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதற்கு அதிகமான பார்வைகள் கிடைத்து, சாதனையும் புரிந்திருக்கிறது. அந்த வீடியோவில் 'ஆல் ஹெயில் த டைகர் (All Hail The Tiger) என்று ஆங்கிலத்தில் அமைந்த பாடலை பின்னணி இசையாகப் பயன்படுத்தியுள்ளார். அந்த பாடலை நேற்று தனியாக யு டியூபில் வெளியிட்டனர். அதில் பாடலை எழுதியது ஹீசன்பெர்க் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாடலை இசையமைத்து பாடியிருக்கிறார் அனிருத்.
இதற்கு முன்பு 'லியோ' படத்தின் அறிமுக வீடியோவில் 'ப்ளடி ஸ்வீட்' என்ற தலைப்பில் ஆங்கிலப் பாடலைப் பயன்படுத்தியிருந்தார். அந்தப் பாடலையும் ஹீசன்பெர்க் தான் எழுதியுள்ளார். அனிருத் தான் இசையமைத்து பாடியிருந்தார்.
அதற்கும் முன்பாக வந்த 'விக்ரம்' படத்தில் 'வேஸ்டட்' என்ற ஆங்கிலப் பாடலையும் ஹீசன்பெர்க் எழுத அனிருத் பாடி இசையமைத்திருந்தார்.
அனிருத் இசையமைக்கும் படங்களில் தொடர்ந்து அனிருத் - ஹீசன்பெர்க் கூட்டணியின் ஆங்கிலப் பாடல்கள் கவனம் ஈர்க்கிறது. யார் அந்த ஹீசன்பெர்க் என ரசிகர்கள் கேட்டாலும் அனிருத் எந்த பதிலையும் சொல்லவில்லை.