ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன்வாசம், தீபாவளி, பெண்ணின் மனதை தொட்டு உள்ளிட்ட பல மென்மையான காதல் படங்களை இயக்கியவர் எழில். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு விலகி இருந்தார். பின்னர் திடீரென காமெடி தளத்திற்கு மாறி மனம் கொத்திப் பறவை, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், தேசிங்கு ராஜா படங்களை இயக்கினார். தற்போது அவர் 10 வருடங்களுக்கு பிறகு தேசிங்கு ராஜா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த விமலே இரண்டாம் பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, வினோத் ஆகியோரும் நடிக்கின்றனர். இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். வித்யாசாகர் இசை அமைக்கிறார். ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார்.
கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்களுக்கு தனித்தனி லட்சியங்கள் இருக்கிறது. அதனால் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள், இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது. இவர்கள் எந்த சூழ்நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள்? என்பதை மையமாக வைத்து காமெடி கதையாக உருவாகிறது.