போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரான ஜீவா, 12பி, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, தாம் தூம் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இந்த நிலையில் அவருடைய மகள் சனா, இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியவர், தற்போது ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சனா இயக்கும் முதல் படத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் நடித்த ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் சிறு வயது கேரக்டரில் நடித்திருந்த சந்தோஷ் என்பவர் நாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்த படத்தை சுந்தர்.சி.,யின் அவ்னி சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.