வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பாலிவுட் இயக்குனர் பிஜோய் நம்பியார். சைத்தான், டேவிட், பீட்சா, சோலோ, கர்வான் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். சமீபத்தில் நவரசா, ஸ்வீட் காரம் காபி போ்னற ஆந்தாலஜி படங்களை ஓடிடி தளத்திற்காக இயக்கினார். கடைசியாக 'காலா' என்ற ஹிந்தி வெப் தொடரை இயக்கினார். இந்த நிலையில் அவர் ஹிந்தி, தமிழில் ஒரே நேரத்தில் இயக்கும் படத்திற்கு 'போர்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஹிந்திப் பதிப்பில் ஹர்ஷவர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிந்தியில் டாங்கே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு வெவ்வேறு விதமான குணாதிசயங்களை கொண்ட இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை பாதையை எப்படி அமைத்துக் கொள்கிறார்கள். இதில் அவர்கள் கற்றது என்ன? பெற்றது என்ன என்பதுதான் படத்தின் கதை.
டி சீரிஸ், ரூக்ஸ் மீடியா மற்றும் கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஜிம்ஸி காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.