பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலா. பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 'தி நைட் மானேஜர்', 'மேட் இன் ஹெவன்' வெப் தொடர்கள் மூலம் பரபரப்பு கிளப்பியவர். தற்போது இந்தியாவில், இந்திய கலைஞர்களை கொண்டு தயாராகும் ஹாலிவுட் படமான 'மங்கி மேன்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இதன் மூலம் அவர் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா வரிசையில் ஹாலிவுட்டுக்கு செல்கிறார்.
ஆஸ்கர் விருதுகளை குவித்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தேவ் படேல் இப்போது ஹாலிவுட் நடிகர். தற்போது அவர் இயக்கி, தயாரித்து, நடிக்கும் படம் தான் 'மங்கி மேன்'. ஷரோன் மேயர், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஹவுசகா இசை அமைக்கிறார். ஷர்ட்லோ கோப்லி, பிதோபஷ் போன்ற ஹாலிவுட் நடிகர்களுடன் சிக்கந்தர் கவுர், விபின் சர்மா, அஸ்வினி கலேஸ்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகி உள்ளது. வருகிற ஏப்ரல் 5ல் படம் வெளியாகிறது.