2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பூ. அதன் பிறகு 1988ஆம் ஆண்டு தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக உருவெடுத்தார் . கடைசியாக 1989ம் ஆண்டு ஹிந்தியில் பிரேம பதான் என்ற படத்தில் நடித்த குஷ்பூ தற்போது 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஜர்னி என்று ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளார். இதில் ஹிந்தி நடிகர் நானா படேகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தான் இணைந்திருப்பதை தனது எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ள குஷ்பூ, 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் நடிப்பது புத்துணர்ச்சியை அளித்திருப்பதாகவும், நானா படேகருடன் நடிப்பது உற்சாகமளித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.