முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் | 400 படங்களுக்கு இசையமைத்த தேவாவுக்கு தேசிய விருது தரப்படாதது ஏன்? | கூலி டைம் டிராவல் கதையா.? |
200க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்தவர் எம்.எஸ்.பாஸ்கர். சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அவர் கதை நாயகனாக நடிக்கும் படம் 'அக்கரன்'. இந்த படத்தில் அவரது மகள்களாக 'பள்ளிப் பருவத்திலே' வெண்பா, பிரியதர்ஷினி நடித்துள்ளனர். இவர்கள் தவிர 'கபாலி' விஷ்வந்த், நமோ நாராயணன், ஆகாஷ், பிரேம் குமார், கார்த்திக் சந்திரசேகர் நடித்துள்ளனர். எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஆர்.ஹரி இசை அமைத்துள்ளார். அருண் கே.பிரசாத் இயக்கியுள்ளார்.
படம் குறித்து அவர் கூறும்போது "அக்கரன் என்றால் நிலையானவன், அழிக்க முடியாதவன், எங்கும் நிறைந்தவன், கடவுள் என்று பல அர்த்தங்கள் இருக்கின்றன. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விவசாயி எம்.எஸ்.பாஸ்கரின் மகள்கள் வெண்பா, பிரியதர்ஷனி ஆகியோரில் ஒருவர் படிக்கிறார். இன்னொருவர் வீட்டில் இருக்கிறார்.
அவரது மகள்களில் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இச்செயலை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர்.
உடல் பலத்தால் அவர்களை எதிர்க்க முடியாத எம்.எஸ்.பாஸ்கர் தன் புத்தி சாதுர்யத்தால் எப்படி அவர்களை கண்டுபிடித்து பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. பழிவாங்கிய பிறகு அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதும் படத்தில் சொல்லப்படுகிறது. மார்ச் மாதம் படம் திரைக்கு வருகிறது" என்றார்.