தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்ததும் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள கல்கி 2898 ஏடி என்ற படத்தில் வில்லனாக நடித்து முடித்திருக்கிறார் கமல்ஹாசன். இந்த படம் வருகிற மே மாதம் ஒன்பதாம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸ், கமலுடன் அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். பான் இந்திய படமாக தயாராகியுள்ள இப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஹாலிவுட் திரைப்படங்கள் 10 பாகங்கள் வரை திரைக்கு வருவது போல் தற்போது இந்த கல்கி 2898 ஏடி படத்தையும் 9 பாகங்கள் வரை தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. என்றாலும் இந்த தகவலை படக்குழு உறுதிப்படுத்தவில்லை.