டொரோன்டோ விழாவுக்குச் சென்ற 'டோரதி' குழு | அன்றைய பதிவுக்கு பதிலடியா... : சூர்யா Vs சிவகார்த்திகேயன் | காப்பிரைட் உத்தரவை மீறும் இளையராஜா மீது சரிகம வழக்கு : டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் | செலவு சிறுசு.... வரவு பெருசு... : வசூலை வாரிக் குவிக்கும் "ஹனுமான் அன்ஷ்" | விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” | ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்: ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் வெளியீடு..! | 80களில் இந்த திரைப்பிரபலங்கள் எப்படி இருந்திருப்பார்கள்...!! | 'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்' | 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி | விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்' |

கேப்டன் மில்லர் படத்திற்கு பின் தனுஷ் தனது 50வது படமான 'ராயன்' படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கடந்த சில நாட்களாக அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளதாக புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர். ஏற்கனவே தனுஷ், பிரகாஷ்ராஜ் இணைந்து திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இப்போது ஐந்தாவது முறையாக ராயன் படத்திற்காக இவர்கள் இணைந்து நடித்துள்ளனர்.




