‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு |
நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி ஹீரோவாக நடித்துள்ள படம் ‛திரு.மாணிக்கம்'. நாயகியாக அனன்யா நடிக்க, முக்கிய வேடங்களில் பாரதிராஜா, நாசர் ஆகியோர் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் தம்பி ராமையா, இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரனும் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி உள்ளிட்ட படங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
ஆதங்கம்... ஆற்றாமை... தவிப்பு... தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இத்திரைப்படத்தில் நடித்த முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும்... வட்டார மொழியோடு... தங்களது சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார்கள். விரைவில் படம் ரிலீஸாக உள்ளது.