இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
விக்ரம் நடித்த ஜெமினி, கமல் நடித்த அன்பே சிவம் உட்பட பல படங்களில் நடித்தவர் கிரண். சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாத போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். குறிப்பாக தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பார்ப்பதற்கு பிரத்யேகமாக ஒரு செயலி வைத்துள்ளார் கிரண். அதில் பணம் செலுத்தினால், தனது கிளாமர் போட்டோ, வீடியோக்களை பார்க்கலாம், சேட் செய்யலாம் என்று அறிவித்திருக்கிறார்.
கிரண் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛நான் கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதால் பலரும் என்னை படுக்கைக்கு அழைக்கிறார்கள். எத்தனையோ நடிகைகள் இதுபோன்று கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட போதும் என்னை மட்டும் சிலர் டார்க்கெட் செய்கிறார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. எனக்கு பிடித்தமான ஆடைகளை அணிந்து புகைப்படங்கள் வெளியிடுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். அதனால் இதை வைத்துக்கொண்டு படுக்கைக்கு அழைத்து யாரும் என்னை காயப்படுத்த வேண்டாம்'' என்கிறார்.