மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடித்து வரும் படம் 'வேட்டையன்'. 'ஜெய் பீம்' படத்தை இயக்கி த.செ.ஞானவேல் இயக்குகிறார். இதில் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளில் 3ம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
இதில் கலந்து கொள்ள நேற்று விமானத்தில் ஐதராபாத் சென்றார் ரஜினி. அப்போது விமான நிலையத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்தனர். ரஜினியுடன் புகைப்படம் எடுக்க விரும்பினர். ரஜினியும் அவர்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். சமீபகாலமாக ரஜினியிடம் பல மாற்றங்கள் தெரிகிறது சசிகலா வீட்டுக்கு செல்கிறார், கருணாநிதி நினைவகம் திறப்பு விழாவிற்கு செல்கிறார், விஜயகுமார் பேத்தி திருமணத்திற்கு செல்கிறார். இந்த மாற்றங்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.