துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரசாந்த் அங்கு தனது ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று சொல்வார்கள். உயிர்க்கவசம் மட்டுமல்ல, குடும்பத்துக்கே அதுதான் கவசம். சாலை விபத்தினால் பலரின் உயிர் போகிறது. தலைக்கவசம் இல்லாததால்தான் உயிரிழப்பு அதிகரிக்கிறது. இதனால் இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக நிறைய பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
தற்போது விஜய்யுடன் 'கோட்' படத்தில் நடித்து வருகிறேன். பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது ஒன்றும் புதிதல்ல. கல்லூரி வாசல் படத்தில் இருந்து தொடங்கிவிட்டது. திரைப்படத்துறையில் இருந்து எம்.ஜி.ஆர், என்.டி.ராமாராவ், விஜயகாந்த் போன்று, நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வருகிறார். விஜய் கட்சி தொடங்கி இருப்பது நல்ல விஷயம். விஷால் கட்சி தொடங்கினாலும் மகிழ்ச்சிதான். பிற துறையினர் அரசியலுக்கு வந்தால் எப்படி பார்ப்பீர்களோ , அதே போல் திரைத்துறையில் இருந்து வருபவர்களையும் பாருங்கள். மக்களுக்கு சேவை செய்ய கடின உழைப்பு, தைரியம் வேண்டும் அது விஜய்யிடம் அதிகம் உள்ளது.
எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. ஒரு நடிகனாக மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறேன். பெரிய பொருட்ச்செலவில் தயாராகி உள்ள 'அந்தகன்' படம் விரைவில் வெளிவர இருக்கிறது. 'ஜீன்ஸ் 2' படம் பற்றி கேட்கிறார்கள். அதனை இயக்குனர் ஷங்கர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் அழைத்தால் நான் நடிப்பேன். என்றார்.