காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது கே.ஜி.எப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது. இப்படத்தை தற்காலிகமாக 'என்டிஆர் - நீல்' எனும் தலைப்பில் அழைக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் ருக்மணி வசந்த், டொவினா தாமஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இத்திரைப்படம் 2026ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் தேதியன்று வெளியாகிறது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் இணைந்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




