ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இதனை சிதம்பரம் என்பவர் இயக்கினார். உலகளவில் ரூ.100 கோடி வசூலை கடந்து இந்த படம் சாதித்துளளது. தொடர்ந்து இந்தப்படம் மற்றொரு வசூல் சாதனை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர் சிதம்பரம் தமிழகத்தில் உள்ள திரைப்பிரபலங்களை சந்தித்து வருகிறார். நடிகர் தனுஷையும் சந்தித்தார்.
தற்போது இவர் அடுத்து தமிழில் தான் அதிகபட்சமாக படம் இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவுள்ள படத்தை சிதம்பரம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் முதல் ஆளாக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சிதம்பரத்திற்கு அட்வான்ஸ் கொடுத்ததாக சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.