மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய படம் 'லால் சலாம்' சமீபத்தில் வெளிவந்தது. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்திருந்தார்கள். ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படத்தின் ஹார்ட்டிஸ்க் காணாமல் போனதாகவும், இதனால் மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், அதனால் தான் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டதாகவும் அப்போது தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஐஸ்வர்யா எந்த பதிலும் கூறவில்லை. படக் குழுவினர் மறுத்து வந்தார்கள். இதுகுறித்து மனம் திறந்து பேசி உள்ளார் ஐஸ்வர்யா.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் “படத்தின் ஹார்ட்டிஸ்க் காணாமல் போனது உண்மைதான். 21 நாள் நடத்திய படப்பிடிப்பு காட்சிகள் அந்த ஹார்ட்டிஸ்கில் இருந்தது. எல்லாமே படத்தின் முக்கியமான காட்சிகள், இது தவிர இன்னும் சில காட்சிகள் அழிந்து விட்டது. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி அந்த காட்சிகளை படமாக்க நினைத்தோம். ஆனால் நடித்தவர்கள் வேறு படங்களுக்கு சென்று விட்டார்கள். மீண்டும் அனுமதி வாங்குவதில் நிறைய சிக்கல்கள இருந்தது. இப்படி பல பிரச்சினைகள் இருந்ததால் இருக்கிற காட்சிகளை வைத்து சில சமரசங்களோடுதான் படத்தை முடித்தோம். அந்த ஹார்ட்டிஸ்க் மட்டும் காணாமல் போகாமல் இருந்திருந்தால் நான் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக சொல்லியிருப்பேன். இந்த நிகழ்வு எனக்கு ஒரு பாடமாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.