துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிப்பில் 2022ம் தேதி வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. பான் இந்தியா படமாக உருவான இப்படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது. ஜப்பான் நாட்டிலும் வெளியாகி அங்கு அதிக வசூலைக் குவித்த இந்தியப் படம் என்ற பெருமையையும் பெற்றது.
ராஜமவுலிக்கு ஜப்பான் நாட்டிலும் ரசிகர்கள் கூட்டம் உருவானது. அவர்கள் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங்கை இன்று மார்ச் 18ம் தேதி நடத்தத் திட்டமிட்டு அதன்படி நடத்தி வருகின்றனர். இதற்கான முன்பதிவு ஆரம்பமான இரண்டு நிமிடங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாம்.
ஜப்பான் நாட்டிற்குச் சென்றுள்ள ராஜமவுலி இந்த ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடமும் உரையாட உள்ளார்.