துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
ராஜமவுலி இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்தாண்டு ஆஸ்கர் விருது போட்டியில் கலந்து கொண்டு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை இசையமைப்பாளர் மரகதமணிக்கு பெற்று தந்தது. அதுமட்டுமல்ல உலக அளவில் அங்கே வருகை தந்திருந்த பல நாட்டு பிரபலங்கள் அனைவரையும் அந்த படம் வசீகரித்தது. மேலும் அதைத் தொடர்ந்து பல நாடுகளில் அந்த படம் மொழிமாற்றம் செய்தும் திரையிடப்பட்டது. குறிப்பாக ஜப்பானில் அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சமீபத்தில் இந்த படம் ஜப்பானில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அதற்கான முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே இந்த படத்தின் டிக்கெட் விற்று தீர்ந்தது என்றால் எந்த அளவிற்கு ஜப்பான் ரசிகர்கள் இந்த படத்தை ரசித்திருக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம். இந்த நிகழ்வின் போது இயக்குனர் ராஜமவுலியும் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அதன்பிறகு ஜப்பான் ரசிகர்கள் பலர் ராஜமவுலியை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தவுடன் பரிசுகளையும் வழங்கினர்.
அப்படி ஜப்பானை சேர்ந்த 83 வயதான பெண்மணி ஒருவர் ராஜமவுலியை தான் சந்திக்க விரும்புவதாக கூறி பரிசுப் பொருளுடன் செய்தியை அனுப்பிவிட்டு காத்திருந்து அவரை சந்தித்துள்ளார். அந்த செய்தியில், “நான் 83 வயதான பெண்.. ஒவ்வொரு நாளும் ஆர்ஆர்ஆர் பாடலுக்கு நான் நடனம் ஆடி வருகிறேன். இதை ஒன்றன்பின் ஒன்றாக நான் செய்து வருகிறேன். ராஜமவுலி காரு.. வெல்கம் டு ஜப்பான்” என்று குறிப்பிட்டு இருந்தார் இதனைப் பார்த்ததுமே ராஜமவுலி அந்தப் பெண்மணியை உடனே அழைத்து சந்தித்துள்ளார்.
இது குறித்து தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜமவுலி, “ஜப்பானில் பரிசாக கொடுப்பதற்காக காகிதத்தால் செய்யப்படும் ஒரிகாமி கிரேன்ஸை ஆயிரக்கணக்கில் செய்து எனக்கு பரிசாக கொடுத்த 83 வயதான பெண்மணியான அவர் என்னை ஆசீர்வதித்தார். அவர் இதை எனக்கு ஜஸ்ட் கொடுத்து அனுப்பிவிட்டு என்னை பார்ப்பதற்காக கொட்டும் பணியில் காத்திருந்தார். சிலருடைய அன்பிற்கு மீண்டும் நம்மால் கைமாறு எதுவும் செய்ய முடியாது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.